TamilsGuide

கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலயத்தில் சுதந்திரதின நிகழ்வு

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78வது தேசிய சுதந்திர தின நிகழ்வு கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலயத்தில் அதிபர் எம்.எஸ்.எம்.வைஸால் தலைமையில் இன்று நடைபெற்றது.

கல்முனை  பிர்லியன்ட் விளையாட்டுக் கழகத்தின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக , கல்முனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எச்.எம்.என்.விஜேரத்ன கலந்து கொண்டு தேசிய கொடியேற்றி ஞாபகார்த்தமாக மரக் கன்றுகளை நாட்டி வைத்தார்.

இந்நிகழ்வில் பிரதேச சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.சப்றாஸ் நிலாம்இ சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.எம்.ஏ.மஜீட்இகே.ராசமலர்,  கல்முனை பிர்லியன்ட் விளையாட்டுக் கழகத்தின் உயர் பீட உறுப்பினர்களான முஹம்மட் பஸ்வாக், எம்.பளீல் ஆகியோருடன் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Leave a comment

Comment