TamilsGuide

இலங்கையை வந்தடைந்த புனித தேவ்னிமோரி நினைவுச் சின்னங்கள்

பகவான் புத்தரின் புனித தேவ்னிமோரி நினைவுச்சின்னங்கள் இன்று (04) பிற்பகல் 1:00 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்தன.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ், இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன், புத்தரின் புனித தேவ்னிமோரி நினைவுச் சின்னங்கள் கண்காட்சி நிகழ்வு ஹனுப்பிட்டி கங்காராமை விகாரையில் பெப்ரவரி 05 முதல் 11 ஆம் திகதி வரை நடைபெறும்.

இந்தக் கண்காட்சி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் நாளை ஆரம்பமாகவுள்ளது. 

இந்த புனித தாதுக்கள் 1957 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் உள்ள தேவ்னிமோரி தொல்பொருள் தளத்தில் அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்டன. 

இந்த புனித தாதுக்கள் பெப்ரவரி 11 ஆம் திகதி மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு செல்லப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment