இலங்கைக்கும் பின்லாந்துக்கும் இடையிலான அரசியல் ஆலோசனைப் பொறிமுறையொன்றை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கைக்கும் பின்லாந்துக்கும் இடையில் 1954 ஆம் ஆண்டில் உத்தியோகபூர்வமான இராஜதந்திரத் தொடர்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இவ்வாண்டு இருதரப்பினர்களுக்கிடையில் இராஜதந்திரத் தொடர்புகள் ஆரம்பிக்கப்பட்டு 72 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாடப்படுகின்றது.
அக்காலப்பகுதியில் இரு நாடுகளுக்கிடையிலான அரசியல், பொருளாதார, சமூக- கலாச்சார, கல்வி, சுற்றாடல் மற்றும் தனிப்பட்ட தொடர்புகள் மூலம் பலப்படுத்தப்பட்ட உறவுகள், தற்போது முனைப்பான ஒத்துழைப்புக்கள் வரைக்கும் விருத்தியடைந்துள்ளது.
அரசியல், பொருளாதாரம், சுற்றாடல் தூதுப்பணிகள் மற்றும் கலாச்சார ரீதியான துறைகளில் தொடர்புகளை மேம்படுத்தல் மற்றும் பலப்படுத்தல் போலவே பரஸ்பர ரீதியாக ஆர்வங்காட்டுகின்ற பிரராந்திய மற்றும் பல்தரப்பு விடயங்கள் பற்றி கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கின்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு, இருதரப்பினர்களுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
அதற்கமைய, அரசியல் ஆலோசனைப் பொறிமுறையொன்றை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் இலங்கைக்கும் பின்லாந்துக்கும் இடையில் கையொப்பமிடுவதற்காக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


