TamilsGuide

இலங்கையில் தேவ்னிமோரி சின்னங்களின் தரிசனம்

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள தேவனிமோரி  தொல்பொருள் தளத்தில் கண்டெடுக்கப்பட்ட புனித தாதுக்கள்  கொழும்பு கங்காராமை விகாரையில்  பெப்ரவரி 4 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை பொதுமக்களின் வழிபாட்டிற்காக காட்சிப்படுத்தப்படவுள்ளது. 

இந்த புனித தாதுக்கள் இந்திய விமானப்படையின் விசேட விமானம் மூலம் அரச மரியாதையுடன் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது.

இந்த புனித தாதுக்களுடன் குஜராத் மாநில ஆளுநர் ஸ்ரீ ஆச்சார்யா தேவ்வ்ரத் மற்றும் குஜராத் துணை முதலமைச்சர் ஸ்ரீ ஹர்ஷ் சங்கவி ஆகியோர் தலைமையிலான இந்திய தூதுக்குழுவினரும் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.

இந்த புனித தாதுக்கள் 1957 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் உள்ள தேவ்னிமோரி  தொல்பொருள் தளத்தில் அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்டன. 

இந்த புனித தாதுக்கள் பெப்ரவரி 11 ஆம் திகதி மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு செல்லப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment