TamilsGuide

சட்டவிரோத மின்சார இணைப்பு - 90 மில்லியன் ரூபா இழப்பை மீட்டெடுத்த மின்சார சபை

2025 ஆம் ஆண்டில் சட்டவிரோத மின்சார நுகர்வில் ஈடுபட்ட தரப்பினரிடமிருந்து இலங்கை மின்சார சபையின் (CEB) சிறப்பு புலனாய்வுப் பிரிவு 90 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி இழப்பினை வெற்றிகரமாக மீட்டெடுத்துள்ளது.

ஏற்பட்ட இழப்புகளுக்கு இழப்பீடாக மொத்தம் ரூ. 90,242,561.21 வசூலிக்கப்பட்டது என்று இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேநேரத்தில், நீதிமன்ற அபராதமாக மேலதிகமாக 2,527,500.00 ரூபா வசூலிக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளில் மீட்டர் சேதப்படுத்துதல் மூலம் 1,259 மின்சார திருட்டு குற்றச்சாட்டுகளும், அங்கீகரிக்கப்படாத முறையில் மின்சாரத்தை திருட்டத்தனமாக பெற்ற 72 குற்றச்சாட்டுகளும் கண்டறியப்பட்டன. 

இந்த சம்பவங்கள் இலங்கை மின்சார சபைக்கு குறிப்பிடத்தக்க பொருளாதார இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, மின்சாரத்தை மோசடியாகப் பயன்படுத்திய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக CEB இன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசடி மின்சார பயன்பாடு தொடர்பான எந்தவொரு தகவலையும் பின்வரும் எண்களைத் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறும் இலங்கை மின்சார சபை பொதுமக்களை மேலும் கேட்டுக் கொண்டுள்ளது.

பொது தொடர்பு இலக்கம்: 011-2422259

துரித இலக்கம்: 1987
 

Leave a comment

Comment