• Welcome to TamilsGuide
செய்திகள் 1

CID யிலிருந்து வெளியேறினார் நாமல்

இலங்கை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில்சுமார் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

பாதாள உலகக்குழு தலைவரான கெஹபத்ர பத்மேயுடனான தொடர்பு குறித்த விசாரணைக்காகவே அவர் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகினர்.

இதற்கு முன்னரும் நாமல் ராஜபக்சவுக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் நாட்டில் இல்லாத காரணத்தினால் பிறிதொரு திகதியை வழங்குமாறு விடுத்த கோரிக்கைக்கு அமையவே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 

Leave a Reply