TamilsGuide

ஈரானில் நடக்கும் அடக்குமுறைக்கு எதிராக டொராண்டோவில் போராட்டம்

ஈரானில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அதற்குக் காரணமான ஆட்சி அமைப்புக்கு எதிராக போராடி வரும் மக்களுக்கு ஆதரவாக, கனடாவின் டொராண்டோ நகர மையத்தில் ஞாயிற்றுக்கிழமை பெரும் அளவிலான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டம் காரணமாக நகர மையத்தின் முக்கிய பகுதிகள் பல மணி நேரங்கள் முழுமையாக முடங்கின.

கடந்த டிசம்பர் 28ஆம் திகதி, ஈரானில் விலைவாசி கடுமையாக உயர்ந்ததை எதிர்த்து தொடங்கிய நாடு முழுவதுமான போராட்டங்கள், பின்னர் கடந்த சுமார் 50 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்து வரும் மத ஆட்சியாளர்களுக்கு எதிரான அரசியல் எதிர்ப்பாக மாறியது.

இதே நேரத்தில், ஆட்சிக்கு ஆதரவாகவும் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி தங்களின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த டொராண்டோ போராட்டத்தில் பங்கேற்ற பொறியா ஷாஃபியா என்ற பொறியாளர், ஈரானில் வாழ்ந்து வரும் தனது உறவுகள் குறித்து கடும் கவலையில் இருப்பதாக தெரிவித்தார்.

என் உறவுகளைப் பற்றி கேட்கவே பயமாக இருக்கிறது. பதில் என்னவாக இருக்கும் என்று தெரியாமல் மனம் அஞ்சுகிறது,” என அவர் கூறியுள்ளார்.

உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையும், அதே நேரத்தில் மோசமான செய்தி வந்துவிடுமோ என்ற பயமும் எப்போதும் இருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சாங்கோஃபா சதுக்கத்திலிருந்து குயின்ஸ் பார்க் வரை நடைபெற்ற இந்த பேரணியில், ஈரானில் ஜனநாயக தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.

டொராண்டோ போலீசார் வெளியிட்ட அறிக்கையின் படி, 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதனால் சாலைகள் மூடப்பட்டு, போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
 

Leave a comment

Comment