வெனிசுவேலாவில் 07 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்க தூதரகம் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்து. இதனை அடுத்து அமெரிக்க தூதுவர் லாரா டோகு வெனிசுவேலாவுக்கு சென்றார். அவர் வெனிசுவேலாவில் அமெரிக்க தூதரகத்தை திறப்பதற்காக அங்கு சென்றடைந்தார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில்,
நானும் எனது குழுவும் பணியாற்றத் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தார். கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்காவும் வெனிசுலாவும் தூதரக உறவுகளைத் துண்டித்து, தங்கள் தூதரகங்களை மூடின என்பது குறிப்பிடத்தக்கது.


