பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முதல் கையொப்பத்தையிட்டு 24 நாட்கள் கடந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடியாமலுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை சபாநாயகரிடம் சமர்ப்பிக்க குறைந்தபட்சம் 20 எம்.பிக்கள் கையெழுத்திட வேண்டும். இன்னும் குறைந்தபட்சம் 20 கையொப்பங்களைப் பெற முடியவில்லை.
ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தான் தீர்மானத்தை முன்வைப்பதாக நாடாளுமன்றத்தில் சவால் விடுத்திருந்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கையெழுத்திடப் போவதில்லை என்று கூறியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியில் 40 எம்.பிக்கள் உள்ளனர். அவர்களில் 20 பேரின் கையொப்பங்களைப் பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கட்சிக்குள் உள்ளக சிக்கல் பாரிய அளவில் தென்படுவதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.


