TamilsGuide

மஹிந்த ராஜபக்சவை சந்தித்த வெளிநாட்டு தூதுவர்

இலங்கைக்கான பாலஸ்தீன தூதுவர் இஹாப் ஐஎம் Ihab IM,கலீல் ஆகியோர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தங்கியிருக்கும் கொழும்பு இல்லத்தில் கடந்த 29 ஆம் திகதி இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதில் இலங்கைக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான தொடர்ச்சியான நட்பை நினைவுகூரும் வகையில் பல பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக தெரியவந்துள்ளது.

கடந்த காலத்திலிருந்து இரு நாட்டுக்கும் இடையிலான நீண்டகால ஒற்றுமையை நன்றியுடன் நினைவுகூர இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டோம் என இலங்கைக்கான பாலஸ்தீன தூதுவர் இஹாப் ஐஎம் Ihab IM குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a comment

Comment