TamilsGuide

வடமாகாணத்தில் பெய்துவரும் அதிகரித்த மழைவீழ்ச்சி – நெற் பயிர்களுக்கு பலத்த சேதம்

வட மாகாணத்தில் தற்பொழுது கனத்த மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தற்பொழுது பெரும் போக அறுவடை நடைபெற்று வரும் நிலையில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற் கதிர்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

குறித்த மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடு குளத்தின் நீர் வரத்து அதிகரித்ததன் காரணமாக நீர்மட்டம் தற்பொழுது 36.6 அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக இரணைமடு குளத்தின் 08 கதவுகளும்1/2இஞ்சி மேலதிக நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment