TamilsGuide

நாட்டின் பல்வேறு இந்து ஆலயங்களிலும் தைப்பூச வழிபாடுகள் இடம்பெற்றன

வரலாற்று சிறப்பு மிக்க சின்னக்கதிர்காமம் என்றழைக்கப்படும் மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடை சூழ தைப்பூச வழிபாடுகள் இன்றைய தினம் ( 01 ) வெகு விமர்சையாக நடைபெற்றது.

இன்று காலை சம்பிரதாயமுறைப்படி ஆலய வயற்காணியில் நெல் அறுவடை இடம்பெற்று, ஊர்வலமாக புதிர் ஆலயத்திற்கு எடுத்துவரப்பட்டு பொங்கல் பொங்கி பக்தி பூர்வமாக தைப்பூச வழிபாடுகள் நடைபெற்றது.

இதேவேளை, செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற தைப்பூச புதிர் உண்ணல் விழா இன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டம் செட்டிபாளையம் அருள்மிகு ஸ்ரீ ல ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் தைப்பூசத்தினத்தில் நடைபெறும் புதிர் உண்ணல் விசேட பூஜை இன்று ( 01 ) பக்தி பூர்வமாக நடைபெற்றது.

விசேட பூசையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது புதிய அறுவடை நெல்லை இறைவனுக்குப் படைத்து, பிரசாதம் பரிமாறப்பட்ட அந்த பக்திமயமான நிகழ்வும் இடம்பெற்றது.
 

Leave a comment

Comment