கிழக்கு கொங்கோவில் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்து ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இப்பகுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பகுதியாகும் என்பதுடன், அவர்களால் நியமிக்கப்பட்ட ஆளுநரின் பேச்சாளர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
கோல்டன் கனிமத்தை வழங்கும் முக்கிய சுரங்கமாக கருதப்படும் ருபாயா (Rubaya) சுரங்கத்திலேயே இந்த துரதிர்ஷ்டவசமான விபத்து நிகழ்ந்துள்ளது.
உலகிற்குத் தேவையான கோல்டன் கனிமத்தில் சுமார் 15% இந்த ருபாயா சுரங்கத்திலிருந்தே உற்பத்தி செய்யப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்தச் சுரங்கம் 2024 ஆம் ஆண்டிலிருந்து AFC/M23 எனப்படும் கிளர்ச்சிக் குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.


