ட்ரம்ப் கொடுத்துவரும் தொல்லை காரணமாக, அமெரிக்க தயாரிப்புகளை நிராகரிப்பதன்மூலம் தங்கள் நாட்டுப்பற்றைக் காட்ட விரும்புகிறார்கள் கனேடியர்கள்.
ஆனால், அவர்கள் உள்நாட்டு தயாரிப்புகள் என நம்பி வாங்கும் பொருட்கள் எல்லாம் உண்மையாகவே கனேடிய தயாரிப்புகளா?
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக இணைக்கப்போவதாக மிரட்டியதும், கனடா மீது கூடுதல் வரிகள் விதித்ததும் கனேடியர்கள் பலருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆகவே, அமெரிக்காவைப் புறக்கணிக்கும் பல்வேறு விடயங்களைச் செய்து, அதன் மூலம் ட்ரம்புக்கு சவால் விட நினைக்கிறார்கள் கனேடியர்கள்.
அவ்வகையில், அமெரிக்கத் தயாரிப்புகளை புறக்கணிப்பதன் மூலம், வேறு வகையில் கூறினால், உள்நாட்டு தயாரிப்புகளை வாங்குவதன் மூலம் தங்கள் நாட்டுப்பற்றை காட்ட விரும்புகிறார்கள் பலர்.
விடயம் என்னவென்றால், உள்நாட்டு தயாரிப்புகள் என மக்கள் கருதும் பல தயாரிப்புகள் உண்மையில் அமெரிக்க தயாரிப்புகள் என தெரியவந்துள்ளது.
குறிப்பாக, Betty Crocker’s chocolate chip cookie mix என்னும் தயாரிப்பில், ’Canada's #1 Selling Baking Mix Brand’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல, Habitant pea soup என்னும் உணவின் டின் மீது ’Designed in Canada’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், McCain Super Spirals french fries என்னும் உணவுப்பொருளின் லோகோவில், maple இலையின் படமும், ’Proud Canadian Company’ என்னும் சொற்களும் இடம்பெற்றுள்ளன.
விடயம் என்னவென்றால், இந்த தயாரிப்புகளை திருப்பி பின்பக்கம் பார்த்தால், அவற்றில், ’Product of USA’, அதாவது, முன்பக்கம் பார்த்தால் கனேடிய தயாரிப்புகள் போல் தோன்றும் இந்த உணவுபொருட்களின் கவர் அல்லது டின்களின் பின்பக்கத்திலோ, அமெரிக்க தயாரிப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிறுவனங்கள் செய்யும் இந்த விடயம், தங்களை ஏமாற்றுவது போல் உள்ளதாக வருத்தம் தெரிவிக்கிறார்கள் உண்மை தெரிந்தவர்கள்.
ஆனால், Product of Canada, Designed in Canada என ஒவ்வொரு விடயத்துக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கிறதாம்.
ஆக, கனேடிய தயாரிப்புகளை மட்டும் வாங்க விரும்பும் கனேடியர்கள், தாங்கள் வாங்கும் பொருள் மீது ;Product of Canada’ என குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை கவனித்து வாங்குமாறு ஆலோசனை கொடுக்கப்பட்டுள்ளது.


