TamilsGuide

இளையராஜா கைகளால் விருது வாங்கியது குறித்து இளம் நடிகை பாக்யஸ்ரீ நெகிழ்ச்சி

தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகையான பாக்யஸ்ரீ போர்ஸ் அஜந்தா எல்லோரா சர்வதேச திரைப்பட விழாவில் (AIFF) இளையராஜா கைகளில் விருது வாங்கியது குறித்து நெகிழ்ச்சி பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், டியர் இளையராஜா சார், எனது சொந்த ஊரான சத்ரபதி சம்பாஜிநகரில் நடைபெற்ற அஜந்தா எல்லோரா சர்வதேச திரைப்பட விழாவில் உங்களால் கௌரவிக்கப்பட்டதை வார்த்தைகளால் விவரிக்க முடியாத பெருமையாகக் கருதுகிறேன்.

உங்களது ஆசீர்வாதங்களுடன் எனது பயணத்தைத் தொடங்குவதில் நான் மிகுந்த நன்றியுணர்வுடன் இருக்கிறேன்.

இந்த அழகான கௌரவத்திற்கும், 'மராத்வாடாவின் மகள்' என்று என்னைக் கொண்டாடியதற்கும் AIFF-க்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

சத்ரபதி சம்பாஜிநகர் எப்போதும் பெருமைப்படும் வகையில் செயல்படுவேன் என உறுதியளிக்கிறேன்.

எனது சாதனையைப் பாராட்டிப் பேசிய ரசூல் பூக்குட்டி சார் அவர்களுக்கு மிக்க நன்றி." என்று தெரிவித்துள்ளார்.

பாக்யஸ்ரீ தமிழில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான காந்தா படத்தில் குமாரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வருட அஜந்தா எல்லோரா சர்வதேச திரைப்பட விழாவில் இளையராஜாவுக்கு பத்மபாணி விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a comment

Comment