TamilsGuide

கரையோர ரயில் சேவைகளில் தாமதம்

கொழும்பு கோட்டை மற்றும் வெள்ளவத்தை ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்று (31) மற்றும் நாளை (01) ஆகிய இரண்டு தினங்களில் ரயில் சேவைகள் தாமதமாகக்கூடும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

கொழும்பு கோட்டை மற்றும் வெள்ளவத்தை ரயில் நிலையங்களுக்கு இடையிலான மேல் மற்றும் கீழ் மார்க்கங்களில் இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, சமிக்ஞை கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய மேம்படுத்தல் பணிகள் காரணமாக இந்தத் தாமதம் ஏற்படக்கூடும் என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்தப் பணிகள் காரணமாக, இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு தினங்களிலும் காலை மற்றும் மாலை வேளைகளில் கரையோர மார்க்கத்தில் பயணிக்கும் புகையிரதங்கள் சுமார் 15 நிமிடங்கள் வரை தாமதமாகக்கூடும் என்றும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக ரயில் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு ரயில்வே திணைக்களம் வருத்தம் தெரிவித்துள்ளது.
 

Leave a comment

Comment