TamilsGuide

மீண்டும் இணையும் மெகா ஹிட் கூட்டணி- பிரபுதேவா - வடிவேலுவின் BANG BANG

நடிகர்கள் பிரபுதேவா, வடிவேலு கூட்டணியில் புதிதாக உருவாகி வரும் படத்திற்கு `BANG BANG' எனப் பெயரிடப்பட்டுள்ளது. படத்தை சாம் ரோட்ரிகஸ் இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் தலைப்பு மற்றும் அறிவிப்பு புரோமோவை இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யா வெளியிட்டுள்ளார்.

காதலன், மனதை திருடிவிட்டாய், ராசைய்யா, மிஸ்டர் ரோமியோ, லவ் பேர்ட்ஸ் மற்றும் எங்கள் அண்ணா போன்ற படங்களின் மூலம் 90ஸ்களில் ரசிகர்களை மகிழ்வித்த இந்த காமெடி கெமிஸ்ட்ரி கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Leave a comment

Comment