• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வெனிசுலாவில் தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி - ட்ரம்ப் செய்த செயல்

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கைதுசெய்யப்பட்ட பின்னர், அந்நாட்டின் தற்காலிக ஜனாதிபதியாக டெல்சி எலோய்னா ரோட்ரிக்ஸ் முறைப்படி பதவியேற்று கொண்டார்.

இந்த நிலையில், வெனிசியூலாவில் தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கும் வகையில், அந்நாட்டின் ஹைட்ரோகார்பன் சட்டத்தில் சீர்திருத்தம் செய்ய வெனிசுலா அரசின் மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் மூலம் வெளிநாட்டு நிறுவனங்கள் வெனிசுலாவின் இலாபகரமான எண்ணெய் துறையில் சுதந்திரமாக கால்பதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்டத்திருத்தத்தில் வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி எலோய்னா ரோட்ரிக்ஸ் கையெழுத்திட்ட பிறகு, அந்நாட்டின் எண்ணெய் துறையில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கிடையில், வெனிசுலாவின் எண்ணெய் துறை மீதான அமெரிக்க அரசின் வர்த்தக தடைகளை ட்ரம்ப் நீக்கியுள்ளார்.

இதன் மூலம் அமெரிக்க நிறுவனங்கள் வெனிசுலாவில் செயல்படுவதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.    
 

Leave a Reply