TamilsGuide

படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து - மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இன்று இந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் இன்று காந்தி டாக்ஸ் படம் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதி படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு சண்டை காட்சியின் போது அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த செய்தியை கேட்ட அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அவர் விரைவில் குணமடைய வேண்டி பதிவு செய்து வருகிறார்கள்.

இப்படியொரு செய்தி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a comment

Comment