• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரதீப் ரங்கநாதனின் LIK ரிலீஸ் வெளியான அப்டேட்

சினிமா

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் 'LIK' (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி). இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானும், எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர்.

நயன்தாரா மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இப்படத்திற்கான பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து படம் வெளியாவது குறித்த அறிவிப்புகள் வெளியானாலும் படம் வெளியாகவில்லை.

இந்த நிலையில், 'LIK' படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி மாதம் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, அடுத்த மாதம் 12 மற்றும் 13-ந்தேதிகளில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

'LIK' படம் கடந்த ஆண்டு காதலர் தினத்தன்று வெளியாகும் என முதன் முதலில் கூறப்பட்டது. அதன்பின், செப்டம்பர் 18, அக்டோபர் 17, டிசம்பர் 18 என வெளியிட்டு தேதிகள் மட்டுமே அறிவிக்கப்பட்ட நிலையில் படம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a Reply