TamilsGuide

மகாத்மா காந்தியின் 78 ஆவது சிரார்த்த தினம்

உலகுக்கு அகிம்சையை போதித்த மகாத்மா காந்தியின் 78 ஆவது சிரார்த்த தினம் இன்று காலை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள காந்தியடிகளாரின் நினைவுச்சிலை அருகில் நடைபெற்றது.

இந்நிகழ்வானது மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் தலைவர் கலாநிதி அ.செல்வேந்திரன்  தலைமையில் நடைபெற்றது.

காந்தியடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டு பாடலும் பாடப்பட்டது. அதனைத்தொடர்ந்து காந்தீயம் பத்திரிகை வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் செயலாளர் க.பாரதிதாசன், காந்தீயம் பத்திரிகையின் ஆசிரியர் எம்.சத்தியசீலன் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
 

Leave a comment

Comment