TamilsGuide

தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் - நயன்தாரா, ஜோதிகா, சாய் பல்லவிக்கு அறிவிப்பு

2016-2022ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், 2014-2022ம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகளையும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் பிப்ரவரி 13ம் தேதி அன்று நடைபெறும் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்.

சிறந்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஒரு சவரன் தங்கப்பதக்கம், சான்றிதழ் வழங்கப்படுகிறது.

சிறந்த நடிகர்களுக்கான விருது சூர்யா, தனுஷ், விஜய்சேதுபதி, கார்த்தி, பார்த்திபன், ஆர்யா, விக்ரம் பிரபுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த நடிகைகளுக்கான விருது, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சு வாரியர், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், லியோ மோல் ஜோஸ், சாய் பல்லவிக்கு சிறந்த நடிகைகளுக்கான தமிழக அரசின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment