TamilsGuide

ஒன்டாரியோவில் 50 வாகனங்கள் மோதி விபத்து

ஒன்டாரியோ மாகாணத்தில், டொராண்டோ நகரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சாலையில் சுமார் 50 வாகனங்கள் தொடர்புடைய தொடர் விபத்துகள் ஏற்பட்டதாக ஒன்டாரியோ மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.

விபத்துகளில் உயிருக்கு ஆபத்தான அல்லது கடுமையான காயங்கள் ஏற்பட்டதாக எந்த அறிகுறியும் இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

விபத்தில் சிக்கிய சிலர் சிறிய காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

அதேவேளை விபத்துகள் காரணமாக சாலையில் சிக்கித் தவித்த ஓட்டுநர்களுக்காக அவசர மாற்றுப் பாதைகள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஒன்டாரியோ மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.
 

Leave a comment

Comment