நடிகை ஸ்ருதி ஹாசன் தனது 40வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் ஸ்ருதி ஹாசன் நடித்து வரும் படங்களில் புது போஸ்டரும் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளிவந்து இருக்கின்றன.
ஸ்ருதி ஹாசன் தெலுங்கில் நடித்து வரும் Aakasamlo Oka Tara என்ற படத்தின் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. அதில் வாயில் சிகரெட் உடன் ஸ்ருதி ஹாசன் இருக்கிறார்.
அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. Aakasamlo Oka Tara படத்தின் துல்கர் சல்மான் ஹீரோவாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.


