TamilsGuide

யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவரை சந்தித்த வேலணை பிரதேச சபை தவிசாளர்

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின்  ஒழுங்குபடுத்தலில் யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவருக்கும் வேலணை பிரதேச சபை தவிசாளர்  சிவலிங்கம் அசோக்குமார் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது.

குறித்த கலந்துரையாடலில் இந்திய இழுவைப்படகு மீனவர்களால் நயினாதீவு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள்

நயினாதீவில் தற்சமயம் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும்  சூரியகல மின் உற்பத்தி தொடர்பான விடையங்கள் அதனுடன் தொடர்புடைய அபிவிருத்திகள் மற்றும் வேலணை பிரதேசத்தின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பிலும் கலந்துரையப்பட்டது.

இவ் கலந்துரையாடலில்  நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வேலணை பிரதேச சபையின் தவிசாளர்  சிவலிங்கம் அசோக்குமார், வேலணை பிரதேச சபையின் உப தவிசாளர்  கணபதிப்பிள்ளை வசந்தகுமாரன், வேலணை பிரதேச சபையின்  உறுப்பினர்கள் செல்லப்பா பார்த்தீபன், மங்களேஸ்வரன் கார்த்தீபன்,  நயினாதீவு கடற்தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் மற்றும் இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் போன்றோர் கலந்துகொண்டனர்


 

Leave a comment

Comment