TamilsGuide

ஹமாஸை நிராயுதபாணியாக்குவோம் - நெதன்யாகுவின் கடும் எச்சரிக்கை

இஸ்ரேல் தனது இலக்குகளை அடைவதில் உறுதியாக இருப்பதாக அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.

காசாவிலிருந்து மீட்கப்பட்ட கடைசி இஸ்ரேலிய பணயக்கைதியான ரன் கிவிலியின் (Ran Gvili) இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு அவர் இதனைக் கூறினார்.

அங்கு அவர் உரையாற்றுகையில், "எமது பணிகளை முழுமையாக நிறைவேற்றுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். ஹமாஸை நிராயுதபாணியாக்குவது மற்றும் காசாவை இராணுவமயமற்ற பிரதேசமாக மாற்றுவதே எமது நோக்கம், இதில் நாங்கள் வெற்றியும் பெறுவோம்.

இஸ்ரேலுக்கு எதிராக எவரேனும் கையை உயர்த்தினால், அவர்கள் அதற்கு மிகப்பெரிய விலையைக் கொடுக்க நேரிடும் என்பதை எமது எதிரிகள் தெரிந்து கொள்ளட்டும்." என இஸ்ரேலிய பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  
 

Leave a comment

Comment