TamilsGuide

இரண்டு ஜோடி பறவைகள்!

ஒருமுறை, மக்கள் குரல் பத்திரிகையில் சிவாஜி கணேசன் பேட்டி ஒரு வாரம் முழுவதும் வெளிவந்தது. அந்த நேர்காணலில் பல்வேறு விஷயங்கள் குறித்து சிவாஜி பேசியிருப்பார். 

மிக ஆழமான பேட்டியாக அந்தப் பேட்டி இருந்தது. அந்தப் பேட்டியில், “எம்.ஜி.ஆரும் நீங்களும் திரையுலகில் கொடிகட்டிப் பறந்த அரசர்களாக இருந்தீர்கள். 

பின்னாட்களில், அரசியலுக்குச் சென்ற பிறகு எம்.ஜி.ஆர் மிகப்பெரிய உயரத்தை எட்டினார். உங்களால் வெற்றிபெற முடியவில்லையே ஏன்?” என சிவாஜி கணேசனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு சிவாஜி கணேசன் கொடுத்த பதில் மிக அற்புதமாக இருந்தது. "எல்லா பறவைகளையும் கடவுள்தான் படைக்கிறார். 

அதில், சில பறவைகள் மிக உயரத்தில் பறக்கும்; சில பறவைகள் இடைப்பட்ட உயரத்தில் பறக்கும்; சில பறவைகள் தரையில் இருந்து சற்று உயரத்தில் பறக்கும். எல்லாமே பறவைகள்தான். 

ஆனால், அவை பறக்கும் உயரம் வேறானதாக இருக்கிறது. இதுதான் இறைவனின் படைப்பு. அதுபோல, எம்.ஜி.ஆர் அரசியலில் உயரப்பறக்கும் பறவை. அந்த ஆற்றலைக் கடவுள் அவருக்கு வழங்கியிருக்கிறார். 

நான் தரையில் இருந்து சற்று உயரத்தில் பறக்கக்கூடிய பறவை. எனக்கு கடவுள் கொடுத்த ஆற்றல் அவ்வளவுதான். அதனால் என்னால் அந்த உயரத்தில் பறக்க முடியவில்லை" என்றாலும் இரண்டு ஜோடிகளும் இணை பிரியாத ஜோடிகள்.

ஒன்றுக்கு ஒரு துயர் வந்தாலும் மற்றொன்றால் தாங்க இயலாது என சிவாஜி கணேசன் கூறினார்.

- பிரசாந்த் !

Leave a comment

Comment