TamilsGuide

கனடாவில் அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களின் மருத்துவ கட்டணங்களில் ஒரு மாற்றம்

கனடாவில், மே மாதம் முதல் அகதிகளுக்கும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கும் மருத்துவக் கட்டணம் தொடர்பில் ஒரு புதிய விதி அறிமுகமாக உள்ளது. 

மே மாதம் 1ஆம் திகதி முதல், கனடாவில் வாழும் அகதிகளும் புகலிடக்கோரிக்கையாளர்களும் மருத்துவக் கட்டணங்களில் ஒரு பகுதியை செலுத்தவேண்டியிருக்கும்.

மே மாதம் 1ஆம் திகதி முதல், அகதிகளும் புகலிடக்கோரிக்கையாளர்களும், பல் மருத்துவம், கண் மருத்துவம் மற்றும் பிசியோதெரபி போன்ற சிகிச்சைகளுக்கான கட்டணங்களில் 30 சதவிகிதமும், ஒவ்வொரு மருந்துச்சீட்டுக்கும் 4 டொலர்களும் செலுத்தவேண்டியிருக்கும்.

இந்த விதியால், அகதிகளுக்கும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கும் சிகிச்சை கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம் அல்லது மருத்துவ உதவியே கிடைக்காமல் போகவும் வாய்ப்புள்ளது என விமர்சனங்கள் எழுந்துள்ளன. 
 

Leave a comment

Comment