TamilsGuide

வடமராட்சி கிழக்கு போக்குவரத்து பிரச்சனைகள் தொடர்பாக கள விஜயம்

யாழ் வடமராட்சி கிழக்கு பகுதியில் அண்மைக்காலமாக பல்வேறு போக்குவரத்து பிரச்சனைகள் இடம் பெற்றுவரும் நிலையில் வடமராட்சி கிழக்கு பொது அமைப்புக்களால் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜீவனின் கவனத்திருக்கு கொண்டுவரப்பட்டதனை அடுத்து அவரால் கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை கோரப்பட்ட நிலையில்  குறித்த கள விஜயத்தினை இலங்கை போக்குவரத்து சபை உயர் அதிகாரிகள் வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்கு மேற்கொண்டனர்.

குறித்த விடயங்கள் தொடர்பாக வடமராட்சி கிழக்கு அபிவிருத்தி குழு கூட்டத்தில் பல தடவைகள் மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

குறிப்பாக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் வடமராட்சி கிழக்கு பகுதிக்கு உரிய நேரத்திற்கு வருகை தருவதில்லை,  மருதங்கேணி வைத்தியசாலை அருகாமையில் அதிக நேரம் காத்திருந்து பயணிகளை ஏற்றிச் செல்லல்,  கேவில் வரை பேரூந்துகள் செல்லாமல்கட்டைக்காடுடன் நிறுத்தப்படுவது, நாளாந்தம் பழுதடையும் பேரூந்துகளால் வடமராட்சி கிழக்கிலிருந்து பருத்தித்துறை நகரிற்கு செல்லும் மாணவர்கள் உத்தியோகஸ்தர்கள், பயணிகளின் இன்னல்கள்,  குறைபாடுகளே அண்மைகாலமாக  இலங்கை போக்குவரத்து சபை மீது முன்வைக்கப்பட்டன.
 

Leave a comment

Comment