டொரோண்டோ நகரத்தை தாக்கிய பாரிய பனிப்புயலைத் தொடர்ந்து குவிந்துள்ள பெருமளவு பனியை அகற்றுவதற்காக, விரைவில் குடியிருப்பு வீதிகளில் டம்ப் லாரிகள் இயக்கப்படவுள்ளதாக நகர நிர்வாகம் அறிவித்துள்ளது.
மருத்துவமனை வளாகங்களில் பனி அகற்றும் பணிகள் ஏற்கனவே தொடங்கியுள்ளதாகவும், அடுத்த கட்டமாக பொது போக்குவரத்து நிறுத்தங்கள் முதன்மைப்படுத்தப்படுவதாகவும் நகர மேயர் ஒலிவியா சௌ தெரிவிக்கையில், கூறினார்.
நகரம் முழுவதும் பனி அகற்றும் பணிகள் புதன்கிழமை முதல் தொடங்கும் என நகர நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த மாதத்தில் ஏற்பட்ட இரண்டு பனிப்புயல்களால் சில பகுதிகளில் சுமார் 90 செ.மீ. பனி குவிந்துள்ளதால், இந்தப் பணிகள் மிகப் பெரிய சவாலாக இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டு பெப்ரவரியில் டொரோண்டோ நகரை முடக்கி வைத்த மூன்று தொடர் பனிப்புயல்களைக் காட்டிலும் இந்த முறை பனிப்பொழிவு அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குவிந்துள்ள பனியை அகற்றும் பணிகளை பூர்த்தி செய்வதற்கு சில காலம் தேவைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


