தெலுங்கு சினிமாவில் கலக்கும் பல சீரியல் நடிகைகள் தமிழ் பக்கமும் வந்து செமயாக கலக்குகிறார்கள்.
அப்படி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிந்த நீ நான் காதல் தொடர் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தவர் தான் வர்ஷினி சுரேஷ்.
அந்த சீரியலை முடித்த கையோடு வர்ஷினி ஒரே நேரத்தில் தெலுங்கில் ஒரு சீரியலிலும் தமிழில் மகளே என் மருமகளே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகி வெற்றிகரமாக நடித்து வருகிறார்.
தற்போது நாம் வர்ஷினி இன்ஸ்டாவில் வெளியிட்ட சில அழகிய புகைப்படங்களை காண்போம்.


