திரை உலக பிரபலங்கள் பலர் துபாயில் வீடு வாங்கி வருவது அதிகரித்து வருகிறது. தமிழ் திரை உலக நட்சத்திரங்கள் மட்டுமல்ல பாலிவுட், தெலுங்கு, மலையாள திரை உலகில் பலரும் துபாயில் சொந்தமாக வீடு வாங்கி உள்ளனர். தமிழ் திரை உலகில் அஜித், நயன்தாரா, யுவன் சங்கர் ராஜா உள்பட பலர் வீடு வாங்கி இருக்கும் நிலையில் நடிகர் சிம்புவும் துபாயில் தற்போது சொந்தமாக ஒரு வில்லாவை வாங்கி இருக்கிறார்.
அஜித் வீட்டின் அருகே இருக்கும் இந்த ஆடம்பர வில்லாவின் விலை ரூ.57 கோடி என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. வீட்டிற்கான அட்வான்ஸ் தொகை ரூ.22 கோடியை பிரபல தயாரிப்பாளர் ஒருவர் கொடுத்து இருக்கிறார்.
சென்னையில் இருந்து 4 மணி நேரம் விமான பயணத்தில் துபாய் சென்று தனி உரிமையுடனும் சுதந்திரமாகவும் இருப்பதற்கு வசதியாக இருப்பதால் அங்கு வீடு வாங்கும் பிரபலங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.


