TamilsGuide

வவுனியா, செட்டிகுளத்தில் விபத்து – நால்வர் படுகாயம்

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.

மன்னாரில் இருந்து மாதவாச்சி நோக்கி பயணித்த கூலர் ரக வாகனமும் மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த ஜீப் ரக வாகனமும் செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்கு அருகாமையில் மோதி விபத்துக்குள்ளகியுள்ளது.

குறித்த விபத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த விபத்தானது வீதியில் நின்ற கட்டாக்காலி மாடுகளினால் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளதுடன், மேலதிக விசாரணையினை செட்டிகுளம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment