கதிரியல் தொழில்நுட்பவியலாளர்கள் மீண்டும் வேலைநிறுத்தம்
இலங்கை
நாளை (28) காலை 8:00 மணி முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தை நடத்துவதற்கு தீர்மானத்துள்ளதாக அரச கதிரியல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் (GRTA) தெரிவித்துள்ளது.
தொழிற்சங்க நடவடிக்கையின் போது, சி.டி ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன், மேமோகிராம் மற்றும் அறுவை சிகிச்சை அறைகளில் கதிர்வீச்சு பயன்பாடு தேவைப்படும் அறுவை சிகிச்சைகள் உள்ளிட்ட அனைத்து கதிரியக்க பரிசோதனைகளும் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்தார்.
ஜனவரி 21 ஆம் திகதி தொடங்கப்பட்ட 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்திற்குப் பின்னர் திருப்திகரமான தீர்வு எதுவும் வழங்கப்படாததால், தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தைத் தொடர முடிவு செய்யப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.























