TamilsGuide

ஓட்டமாவடி பிரதேசத்தில் ஆசிரியர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பிரதேசத்தில், பாடசாலை ஆசிரியர் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்படும் காட்சி CCTV கெமராவில் பதிவாகியுள்ளது.

நீண்ட காலமாக நிலவி வந்த தகராறு ஒன்று தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதாலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவத்தில் குறித்த ஆசிரியர் காயமடைந்துள்ளதோடு, அவர் சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும், தாக்குதலை நடத்திய சந்தேகநபர் தற்போது தலைமறைவாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a comment

Comment