இரத்தினபுரி, பரகடுவ பகுதியில் உள்ள ஒரு உணவகத்தின் உரிமையாளருக்கு எதிராக ஒரு இலட்சம் ரூபா அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நுகர்வோர் பாதுகாப்பு விவகார அதிகார சபை தெரிவித்துள்ளதாவது,
தூரப் பயண பேருந்துகள் நிறுத்தும் உணவகங்களில் பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவது குறித்து அடிக்கடி புகார்கள் கிடைக்கின்றன.
இந்நிலையில், இரத்தினபுரி, பரகடுவ, பெண்டலுவ பகுதியில் உள்ள ஓர் உணவகத்தில், அதிகபட்ச சில்லறை விலை ரூ. 70.00 கொண்ட குடிநீர் போத்தல் ஒன்றை (500 மி.லி) ரூ. 80.00 இற்கு விற்றமை தொடர்பில் 2025.12.03 அன்று சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
நுகர்வோர் விவகார அதிகார சபையினால் குறித்த வர்த்தகருக்கு எதிராக 2026.01.26 அன்று இரத்தினபுரி நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, குறித்த வர்த்தகருக்கு 100,000 ரூபா அபராதத் தொகையை இரத்தினபுரி நீதிவான் நீதிமன்றம் விதித்தது.


