பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்
இலங்கை
2025 ஏப்ரல் 18 ஆம் திகதி டோலஹேன பகுதியில் 34 வயதுடைய பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய சந்தேக நபரைக் கண்டுபிடிப்பதற்கு மத்துகம பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் கழுத்தில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்ட காயம் காணப்பட்டதாக பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
தாக்குதல் நடத்திய சந்தேக நபர் குறித்த பகுதியை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சந்தேக நபரின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள பொலிஸார், அவர் குறித்து தகவல் தெரிந்தால் 071‑8591701 அல்லது 071‑8594381 என்ற இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
சந்தேக நபரின் பெயர்: புஹ்மானகே டென் சனத் ரவிந்த நிலந்த
விலாசம்: இல. 78/01, இஹல கந்த, அகலவத்தை
தே.அ.அ. எண்: 840321401V






















