• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காமெடி கூட்டணியில் பேசில் ஜோசப் - டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சினிமா

'சிறை' படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் எல்.கே. அக்ஷய் குமார், மலையாள ஸ்டார் பேசில் ஜோசப் உடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிகளில் உருவாகி வரும் படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கியுள்ளார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் எஸ்.எஸ்.லலித்குமார் தயாரித்துள்ளார்.

இதில் ஜாபர் சாதிக், நோபல் கே. ஜேம்ஸ், அருணாச்சலேஸ்வரன், ஷாரீக் ஹாஸன், ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் நடிக்கிறார் கள். இந்தப்படத்துக்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். நகைச்சுவை கதையாக தயாராகும் இந்தப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி உள்ளது. இசையமைப்பாளர் அனிருத் இதனை வெளியிட்டுள்ளார். மேலும் படத்தின் தலைப்பு மற்றும் ரிலீஸ் அறிவிப்பு தொடர்பான வீடியோ ஒன்றையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்து வருகிறது. மேலும் இப்படம் கோடை விடுமுறையில் வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது. 
 

Leave a Reply