ஒவ்வொரு வருடமும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த வருடமும் சிசிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் வேல்ஸ் சென்னை கிங்ஸ், கர்நாடகா புல்டோசர்கள், தெலுங்கு வாரியர்ஸ், மும்பை ஹீரோஸ், பஞ்சாப் தே ஷெர், பெங்கால் டைகர்ஸ், போஜ்புரி தபாங்ஸ், கேரளா ஸ்டைகர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இந்த தொடரில் சென்னை அணி முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்ததால் சென்னை அணியால் அரையிறுதிக்கு தகுதி பெற முடியுமா ? என்ற கேள்வி எழுந்தது. அரையிறுதிக்கான வாய்ப்பு மிக மிக குறைவு என்ற சொல்லப்பட்டது.
சென்னை அணி அரையிறுதிக்கு தகுதி பெற வேண்டுமென்றால் மும்பை அணியுடனான போட்டியில் மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும். அதுமட்டுமல்லாமல் கர்நாடகா அணி போஜ்புரி அணியை தோற்கடிக்க வேண்டும். இது நடந்தால் தான் சென்னை அணி அரையிறுதிக்கு போக முடியும் என்ற சூழல் உருவானது.
கர்நாடகா அணி போஜ்புரி அணியை தோற்கடிக்க மறுபக்கம் சென்னை அணி மும்பைக்கு எதிரான போட்டியில் மிகப்பெரிய வெற்றியை பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
சென்னை கிங்ஸ் அணியின் கேப்டன் விக்ராந்த் நேற்றைய முக்கியமான போட்டியில் சதம் விளாசி தன் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். மேலும் ஆதவ் கண்ணதாசன் நான்கு விக்கெட்களை வீழ்த்தினார்
விக்ராந்த் சதம் அடித்த பிறகு மெர்சல் விஜய் ஸ்டைலில் அந்த சதத்தை கொண்டாடினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் தவெக தொண்டர்களும் இதனை கொண்டாடி வருகின்றனர்.


