TamilsGuide

ரவி தேஜா - பிரியா பவானி சங்கர் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் ரவி தேஜா. இவரை ரசிகர்கள் அன்போடு மாஸ் மகாராஜா என அழைப்பர்.

ரவி தேஜா நடிப்பில் அண்மையில் வெளியான மாஸ் ஜாதரா படம் கலைவையான விமர்சங்களையே பெற்றது.

இந்நிலையில், ரவி தேஜா நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இருமுடி என பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தை சிவா நிர்வாணா இயக்குகிறார். இப்படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் வெளியான குஷி படத்தை சிவா நிர்வாணா இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a comment

Comment