எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தின் ஐம்பொன்னால் செய்யப்பட்ட எழுந்தருளிகள் களவாடப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.
எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தின் இரு எழுந்தருளி ஐம்பொன் சிலைகள் களவாடப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
ஆலயத்தின் வீரபத்திரர் மற்றும் பத்திரகாளி சிலைகளே கடந்த வியாழக்கிழமை அதிகாலை களவாடப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.
முறைப்பாடு தொடர்பில. பொலிஸார் எழுவை தீவிற்குச் சென்று தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றபோதும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
களவாடப்பட்ட இரு சிலைகளும் சுமார் 20 லட்சம் ரூபா பெறுமதியிலானது எனத் தெரிவிக்கப்படுகின்றது.


