TamilsGuide

மாணிக்கக்கல் தோண்டிய இருவர் கைது

அனுமதிப்பத்திரமின்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த சந்தேகநபர்கள் இருவர், அகழ்வு உபகரணங்களுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொகவந்தலாவை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில், டின்சின் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொகவந்தலாவை பிரதேசத்தைச் சேர்ந்த 29 மற்றும் 43 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொகவந்தலாவை பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a comment

Comment