சுகாதார முகாமைத்துவ உதவியாளர் பதவிக்காக நாளை நியமனக் கடிதங்கள்
இலங்கை
அரச சுகாதார முகாமைத்துவ உதவியாளர் பதவிக்காக 213 பேருக்கு நாளை (27) நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன.
இப்பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை கடந்த 2025 ஆம் ஆண்டு நடத்தப்பட்டதுடன்,
இதற்கு முன்னர் 2021 ஆம் ஆண்டில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.
அரச சுகாதார முகாமைத்துவ உதவியாளர் பதவிக்காக 226 பேரை ஆட்சேர்ப்பு செய்ய அனுமதி கிடைத்திருந்த நிலையில், திறந்த போட்டிப் பரீட்சையின் படி தகுதி பெற்ற 246 பேர் நேர்முகத் தேர்வுக்கு உட்படுத்தப்பட்டு, இந்த 213 பேர் அப்பதவிக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் அரச சுகாதார முகாமைத்துவ உதவியாளர் பதவிக்கான அனுமதிக்கப்பட்ட ஆளணி 2,617 ஆக உள்ளதுடன், 1,906 பேர் தற்போது சுகாதார சேவையில் ஈடுபட்டுள்ளனர்.






















