கனடா பிரதமர் மார்க் கார்னி மார்ச் மாதத்தில் அவுஸ்திரோலியாவுக்கு அதிகாரபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவுஸ்திரோலிய பிரதமர் ஆண்டனி ஆல்பனீஸ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், வலிமையான நாடுகள் பொருளாதார ஒருங்கிணைப்பை ஆயுதமாகவும், சுங்க வரிகளை அழுத்தம் கொடுக்கும் கருவியாகவும் பயன்படுத்துவதை கடுமையாக விமர்சித்த கார்னியின் டாவோஸ் உரைக்கு அவர் முழுமையான ஆதரவை வெளியிட்டுள்ளார்.
என் நண்பர் மார்க் கார்னி மார்ச் மாதத்தில் அவுஸ்திரோலியாவுக்கு வருகிறார். அவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார்,” என்று ஆல்பனீஸ் தெரிவித்துள்ளார்.
மார்க் கார்னியின் இந்த அவுஸ்திரோலியா விஜயம், கடந்த அக்டோபரில் கனடா–அவுஸ்திரோலியா உறவுகள் மேலும் வலுப்பெற்றதற்குப் பின்னரே நடைபெறுகிறது.
அப்போது இரு நாடுகளும் முக்கிய கனிம வளங்கள் (critical minerals) தொடர்பான ஒத்துழைப்பு மற்றும் வர்த்தகத்தை ஊக்குவித்து வலுப்படுத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


