TamilsGuide

இந்தோனேசியாவில் நிலச்சரிவு - பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு

ஆசியாவில் அமைந்துள்ள நாடு இந்தோனேசியா. இந்நாட்டின் மேற்கு ஜாவா மாகாணம் புரங்ரங் மலைப்பகுதி அருகே பசிர் லங்கு கிராமம் உள்ளது.

இந்த கிராமத்தில் கடந்த சனிக்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 34 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. இதில், 97 பேர் மண்ணுக்குள் புதைந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் மண்ணுக்குள் புதைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதில், ஏற்கனவே 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் மேலும் 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால், இந்தோனேசியா நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை, நிலச்சரிவில் மாயமான எஞ்சிய 72 பேரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
 

Leave a comment

Comment