TamilsGuide

கள்ளக்காதலனுடன் உல்லாசம் - மனைவியை ஓட்டலில் கையும் களவுமாக பிடித்த கணவர்

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் பகுதியில், திருமணமான மூன்று மாதங்களுக்குள்ளேயே ஒருவர் தனது மனைவியை கள்ளக்காதலனுடன் ஓட்டலில் கையும் களவுமாக பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த தம்பதியினர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னரே திருமணம் செய்து கொண்டதாகவும், சமீப காலமாக தனது மனைவியின் நடத்தை சந்தேகத்துக்கிடமாக இருப்பதை கணவர் கவனித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ தினத்தன்று, மனைவி தனது கைபேசியில் பகிர்ந்த லைவ் லொக்கேஷனை வைத்து, அவர் ஒரு ஓட்டலில் தங்கியிருப்பதை கணவர் கண்டறிந்துள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த அவர், உடனடியாக அந்த ஓட்டலுக்கு சென்று விசாரித்துள்ளார். அங்கு சென்று பார்த்தபோது, தனது மனைவி தனது அலுவலகத்தில் பணிபுரியும் சக ஊழியருடன் உல்லாசமாக இருந்ததை கண்ட கணவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

உடனடியாக அவர் இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் வழங்கியுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மனைவியுடன் இருந்த நபரை கைது செய்துள்ளனர்.

விசாரணைகளில், அவர் அந்த பெண்ணின் சக ஊழியர் என்றும், இவர்களுக்கிடையில் நீண்ட நாட்களாக ரகசிய உறவு இருந்து வந்ததும் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் கணவர் காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்துள்ள நிலையில், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதேவேளை, திருமணமான சில மாதங்களிலேயே இவ்வாறான சம்பவம் இடம்பெற்றமை அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பேசுபொருளாகவும் மாறியுள்ளது.
 

Leave a comment

Comment