TamilsGuide

மதுரையில் 5 ரூபாய்க்கு பரோட்டா விற்பனை செய்து வரும் ரசிகரை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினி

மதுரையில் தீவிர ரஜினி ரசிகரான அல்போன்ஸ் வெறும் 5 ரூபாய்க்கு பரோட்டா வழங்கி வருகிறார். இவரது சேவை சோசியல் மீடியாவில் வைரலாக பரவியது.

இந்நிலையில், தன்னுடைய ரசிகர் ஒருவர் 5 ரூபாய்க்கு பரோட்டா விற்று சேவை செய்து வருவதை அறிந்தரஜினிகாந்த் அவரை சந்திக்க ஆசைபட்டார். அவரை குடும்பத்துடன் வருமாறு அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து அல்போன்ஸ் தனது குடும்பத்துடன் சென்னையில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்தில் அவரை சந்தித்தனர். அப்போது அல்போன்ஸிற்கு ரஜினிகாந்த் தங்க சங்கிலி அணிவித்து கௌரவித்தார். அவருடன் ரஜினி எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது. 
 

Leave a comment

Comment