TamilsGuide

மகாவோயா – பெரகல வனப்பகுதியில் வெட்டுக்காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்பு

மகாவோயா – பெரகல வனப்பகுதியில் உள்ள ஓடை ஒன்றிற்கு அருகிலிருந்து, கழுத்துப் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வராபிட்டிய பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் நேற்று முன்தினம் கால்நடைகளைக் கட்டுவதற்காக இந்தக் வனத்திற்கு சென்றுள்ளார் எனவும் அவர் மீண்டும் வீடு திரும்பாத நிலையில், உறவினர்களும் பிரதேசமக்களும் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போது அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இந்தக் கொலைக்கான காரணம் என்ன அல்லது கொலையைச் செய்தது யார் என்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகாத நிலையில் விசாரணைகளைமகாவோயா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a comment

Comment