TamilsGuide

மானிப்பாய் சபை அமர்வின் போது தூக்கி வீசப்பட்ட அறிக்கை

மானிப்பாய் சபை அமர்வின் போது கணக்கறிக்கை தொடர்பான பிரச்சினையால் அந்த கணக்கறிக்கையானது தூக்கி வீசப்பட்டது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றுமுன்தினம் தவிசாளர் ஜெசீதன் தலைமையில் ஆரம்பமானது.

இதன்போது கணக்கறிக்கையானது சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

குறித்த கணக்கறிக்கையை உடனே வழங்குவதால் அதில் உள்ள பிழைகளை உடனே கண்டுபிடிப்பது கடினம் என்றும், அந்த கணக்கறிக்கையை கூட்டம் நடைபெறுவதற்கு முன்னைய நாட்களில் வழங்க வேண்டும் என்றும் உறுப்பினர் நா.பகீரதன் தெரிவித்தார்.

இதன்போது குறுக்கிட்ட தவிசாளர் ஜெசீதன், கணக்கறிக்கையில் தவறு உள்ளது என்றால், அந்த அறிக்கை சபையில் முன்மொழிந்து, வழிமொழிய முன்னர் அதில் தவறு உள்ளது என்று கூற வேண்டும்.

எல்லாம் முடிந்த பின்னர் கூறக்கூடாது என தெரிவித்தார்.

அந்தநேரத்தில் தவிசாளருக்கும், குறித்த உறுப்பினருக்குமிடையே கடுமையான வாதப்பிரதிவாதங்கள் உண்டான நிலையில் உறுப்பினர் தனது கையில் இருந்த கணக்கறிக்கையை தூக்கி சபையில் வீசி எறிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
 

Leave a comment

Comment