TamilsGuide

மாத்தறை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணர்களோடு சினேகபூர்வ துடுப்பாட்டத்தில் ஈடுபட வருகை

இன நல்லுறவை வளர்க்கும் நோக்குடன்  மாத்தறை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணர்களோடு சினேகபூர்வ துடுப்பாட்டத்தில் ஈடுபடுவதற்காக வருகை  தந்திருந்தனர்.

குறித்த  மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு கல்லூரி அதிபர் சவரி பூலோகராஜா தலைமையில் நடைபெற்றது.

குறித்த வரவேற்பு நிகழ்வில் மாத்தறை மாவட்ட தேசிய மக்கள் சக்தியின்  நாடாளுமன்ற உறுப்பினர் லால் பிரேமநாத் ,பாடசாலை சமூகத்தினர், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர், கரைச்சி பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர்,மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் தலைவர், செயலாளர்,கரைச்சி பிரதேச சபை தவிசாளர்  உள்ளிட்டோர். கலந்து கொண்டனர்.
 

Leave a comment

Comment